Friday, September 18, 2009

உன்னைப் போல் ஒருவன் விமர்சனம்

சாதாரண மனிதனின் கோபம் என்ன செய்து விடும்?
தீவிரவாதத்தை வேரோடு அழித்து விடுமா ?
தேசத்தை திருத்தி விடுமா ?
இது வரை எதுவும் செய்து விடவில்லை, சில ஆட்சி மாற்றங்களை தவிர...[ இப்போ தான் ஓட்டையும் விக்க ஆரம்பிசுவிட்டோமே?!]
அந்த வகையில் நம் இயலாமைக்கு மருந்து போட்டது போல் இருக்கிறது இந்தப் படம்.
இந்த தேசத்தில் சரியாக சிந்திக்க துவங்கி விட்டால் தீவிரவாதியாகத் தான் தோன்றும்.
அது தான் இந்தப் படத்தின் நாயகனுக்கும் நிகழ்கிறது.
தீவிரவாதத்தை தீவிரவாதம் தான் வேரறுக்கும் என்பதை தெளிவாக, உறுதியாக கூறியிருக்கிறார்கள்.
தனி மனிதனின் கோபம் ,இயலாமை எதையும் கிழித்து விடாது என்ற வாழ்க்கை முறையில் வாழ பழகிவிட்ட நமக்கு திரையில் ஓடும் பிம்பங்கள் சில மணி நேரங்களாவது உயிர்ப்பை தருவதென்னவோ உண்மை.
கமலை சாதரண மிடில் கிளாஸ் மனிதனாக ஜீரணிக்க முடியவில்லை.
மற்றபடி நடிப்பில் அவர் என்றும் முதல் தரம் தான்.
மோகன்லால் இயல்பான நடிப்பால் வழக்கம் போல் கவர்கிறார்.
மொத்தத்தில் படம் அருமை.
Don't miss it.

No comments:

Post a Comment